தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

Saturday, April 16th, 2016

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியான தெல்லிப்பளை  வறுத்தலைவிளான் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம்(16) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்ததுடன் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

இதன்போது தாம் மீளக்குடியேறிய போதும் தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் இதர அடிப்படைத் தேவைகள், வீட்டுத் திட்டம், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்வாதார உதவிகளை தமது பகுதிக்கு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்; கலந்துரையாடி, தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்துத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5

1

7

6

3

2

Related posts: