தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

தென்மராட்சி பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேச செயலர் தலைமையில் சாவகச்சேரி பிரதேச பொதுநோக்கு மண்டபத்தில் குறித்த உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மகாவிஷ்னு விளையாட்டுக் கழகம், நாவலர் முன்பள்ளி, சாவகச்சேரி மாதர் அமைப்பு, கலைமகள் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் நிதி ஒதுக்கீடு செய்து குறித்த அமைப்புகளுக்கான தேவைப்பாடுகளை இன்றையதினம் வழங்கிவைத்திருந்தார்.
Related posts:
|
|