தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.
அந்தவகையில் எமது மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே நாம் நீண்டகாலமாக பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அயராது பாடுபட்டு வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணையிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் நாம் பல்வேறுவகையான அபிவிருத்தி திட்டங்களையும் கட்டுமாணங்களையும், மக்கள் நலன்சார் திட்டங்களையும், தொழில் வாய்ப்புக்களையும் எமது மக்களுக்காக பெற்றுக்கொடுத்து வறுமையில் வாடிக்கிடந்த எமது மக்களுக்கு நிறைவான ஒரு வாழ்க்கை நிலையை எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவகையில் உருவாக்கிக் கொடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம். ஆனால் இன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை எம்மிடம் குறைவாக காணப்படுகின்றது.
தற்போது எமது கட்சி முழுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக மாற்றங்கண்டுள்ளது. மக்கள் தேவைகளை முழுமையாக அறிந்து ஆரோக்கியமான செயற்றிட்டங்களை நாம் மேலும் வலுவான முறையில் இதனூடாக மேற்கொள்ள முடியும்.
அதற்கான செயற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் கட்சி நலன்களை பாதுகாப்பதுடன் மக்கள் நலன்களை முன்நிறுத்தியதான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமது மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க நாம் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது வேலணை பிரதேச குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, மற்றும் மக்களது வாழ்வாதார தேவைப்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.
Related posts:
|
|