தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
Wednesday, June 14th, 2017வடமராட்சி வடக்கு தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தும்பளை தேவமாதா கோவிலடி தாமரை மலர்கள் அமைப்பு பிரதிநிதிகள் தமது பகுதிக்கான அடிப்படை தேவைகள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்தனர். இவற்றில் கிணறு புனரமைப்பு, புதிய கிணறு அமைப்பு, மலசலகூடம், வீடமைப்பு உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் கோரிக்கைகளை டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்தனர்
அத்துடன் குடும்ப வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் முகமாக சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கைத்தொழில்துறைகளை விருத்திசெய்யவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கோரிக்கைகளை கவனத்தில்கொண்ட டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|