துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

Thursday, April 26th, 2018

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும் சிவஞானத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலை தெரிவித்தார்.

இன்றையதினம் சீவீகே சிவஞானத்தின் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த செயலாளர் நாயகம் சிவஞானத்திற்கும் அவரது உறவினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்தார்.இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

இதேவேளை திருமதி சரொஜினி அவர்களின்  இறுதி கிரிகைகள் இன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: