தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, March 4th, 2021

தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்து அதனூடாக இங்குவாழும் மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளை நாம் பாரபட்சமற்ற வகையில் தொடர்ந்தும் முன்னெடுபோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

வேலணையில் உள்ள கட்சியின் பிராந்திய அலுவலகத்தில் இன்று கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் –

கந்த நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் தீவகம் உள்ளிட்ட வடக்கு கிழக்க மாகாணங்களில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பணிகள் எவையும் முன்னெடக்கப்படாத நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பின்னடைவை சந்தித்திரக்கின்றது.

இந்நிலையில்தான் இந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.  அந்த அரசில் கடற்றொழில் அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டதுமுதல் இற்றைவரையில் பல மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுத்துவருகின்றேன்.

அவற்றில் கடல் மற்றும் நில வேளாண்மை உள்ளிட்ட துறைகள் மட்டுமல்லாது ஏனைய தொழில்சார் பேட்டைகளையும் உருவாக்கி அதனூடாக வேலைவாய்ப்பில்லாதிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கம் அதேவேளையில் குறித்த கடல் மற்றும் நில வெளாண்மையூடான தொழில்களையும் முன்னெற்றம் காணச்செய்து துறைசார்ந்த தொழிற்றுறைகளையும் இந்த அரசாங்கத்தினூடாக மேம்பாடு காணச் செய்தவருகின்றேன்.

அந்தவகையில் தீவக பகுதியிலும் இவ்வாறான கடல் மற்றும் நில வெளாண்மையை மக்களிடையே அதிகளவில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் - வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ள...
தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
பொதுஜனப் பெருமுன தமிழ் முஸ்லீம் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அடையாளமாக இருப்பவர் அமைச்சர் டகளஸ் தேவ...