தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது – டக்ளஸ் தேவானந்தா!

உள்ளூராட்சி மன்றங்களை வெற்றெடுப்பது மட்டுமல்லாது வடக்குமாகாண சபையையும் எதிர்காலங்களில் நாம் வெற்றெடுப்போமேயானால் அரச நிதியைக் கொண்டும் வேறு நிதிமூலங்களைக் கொண்டும் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை நிச்சயம் நாம் மேம்படுத்துவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றுள்ள சாதகமான சூழலைப் பயன்படுத்தி நிச்சயம் இந்த சபைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறு நாம் வென்றெடுக்கும் பட்சத்தில் இன்றையதினம் உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நாம் இலகுவில் தீர்வுகாண்பதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்கும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மட்டுமல்லாது எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தலிலும் எமது மக்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களை தருவார்களேயானால் இன்று மாகாணசபையை கொண்டு நடத்த முடியாதவர்களுக்கு நாம் எமது சிறந்த செயற்றிட்டங்களினூடாக தகுந்த பாடத்தை புகட்டுவோம்.
மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிகளை மட்டுமன்றி வெவ்வேறு மூலோபாயங்களைக் கொண்டு நிதிகளைப் பெற்றும் எமது பகுதிகளை நாம் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்றும்
இன்றுள்ள வடக்கு மாகாணசபை 300 க்கு மேற்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கின்றதே தவிர அதனை நிர்வகிக்கின்றவர்களால் வேறு எதனையும் செய்யமுடியாது போயுள்ளது என்றும் தெரிவித்த அவர் தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல அவற்றை செயற்படுத்துவதே முக்கியமான விடயமாகும். இதை இன்றுள்ள வடக்கு மாகாணசபை தவறவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்
இப்பகுதியில் முக்கியமாக ஒரு நூலகம் தேவை என்பது நியாயமான கோரிக்கைதான். அதுபோன்று இந்த பகுதிக்கான வீதிப் புனரமைப்பு என்பதும் அத்தியாவசியம் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. அத்துடன் இந்த மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட ஏனைய தேவைப்பாடுகளும் சமகாலத்தில் நிறைவுசெய்யப்படவேண்டும்.
அந்தவகையில் வீணைக்கு அளிக்கும் வாக்குகள் பெறுமதியானவையாக இருக்கும் என்பதுடன் அவை ஒருபோதும் வீணாகப்போவதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|