திருவடிநிலை – காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!
Friday, May 31st, 2024
சுழிபுரம், திருவடிநிலை – காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையில், கடற்றொழில் நடவடிக்கையை மேற்கொள்ளுக்கு அப்பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
குறித்த பகுதியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுட்டு கடற்படையினரது செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று(31.05.2024) மேற்கொண்ட அமைச்சர், நிலமைகளை அவதானித்ததுடன் கடற்படையினருடனும் கலந்துரையாடினார்.
மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களை களைவதற்கான ஆலோசனைகளை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts: