திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

திருகோணமலை மாவட்டத்தின் பாட்டாளிபுரம், பட்டித்திடல், நாவலர்கெங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
முன்பதாக பாட்டாளிபுரம் பகுதிக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களது அடிப்படை உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தினார்
இதேபோன்று பட்டித்திடல், இறால்க்குழி நாவலடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக செயலாளர் நாயகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மக்களின் கோரிக்கைகளான வீடமைப்புவசதி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமது ஆதங்கத்தையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்
இதனிடையே தேர்தல் காலங்களில் வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்களால் தாம் ஏமாற்றப்பட்டு நாதியற்றுக்கிடப்பதாக மக்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|