திருமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ஆராய்வு கூட்டம்!

Friday, May 29th, 2020

திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களுடனான ஆராய்வுக் கூ;ட்டம் ஒன்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளையதினம் சனிக்கிழமை 30 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த ஆராய்வு கூட்டத்தின்போது திருகோணமலை மாவட்ட கடற்றொழிலளர்கள் அவர்களது கடற்றொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும்; பிரச்சினைகள் குறிப்பாக சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடைசெய்தள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: