திருமலை மறைமாவட்ட ஆயருடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Friday, February 24th, 2017

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகையை ஆயர்  இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேற்படி சந்திப்பு ஆயர் இல்லத்தில் இன்றையதினம்(24) நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தில் தற்போது தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் ஆயர் அவர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்  கல்வி வீதி புனரமைப்பு உட்கட்டுமாணப்பணிகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக எடுத்துரைத்தார்.

முக்கியமாக மாவட்டத்தில் தமிழ் பேசும் மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்வித்தரத்தை முன்னேற்றுவதன் அவசியம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தின் மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் திருமலை மாவட்ட பிரதிநிதி புஸ்பராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

IMG_20170224_125658

IMG_20170224_124952
IMG_20170224_124947

 

Related posts: