திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021


திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.சி.ஆர். இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை(16.06.2021) பாதிப்புக்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பிரதேசங்களுக்கான பி.சி.ஆர். இயந்திரங்கள் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திற்கும் ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வருகின்ற கொறோனா அச்சுறுத்தலையும், அந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு, பிரதமரினால் திருகோணமலைக்கு ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், குறித்த மாவட்ட மக்களின் சார்பாக பிரதமருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்...