திருமலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாபெரும் எழுச்சிக் கூட்டம்!

Sunday, January 7th, 2018

நிலாவெளி வீதி ஆனந்தபுரி திருகோணமலையில் அமைந்துள்ள ஈழ ஜனநாயகக் கட்சியின் மாவட்ட பணிமனை வழாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்காக மைதானம் சிவப்பு மஞ்சள் பச்சை வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா திருகோணமலைக்கு வந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ள இந்த மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்னும் சிறிது நேரத்தில் சிறப்புரையாற்றவுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக திருமலை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் சென்று மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தேவைப்பாடுகளைத் தீர்த்துவைக்கும் முகமாக பல்வேறு தீர்வுகளை எட்டும் வகையில் இந்தக் கூட்டத்தில் கருத்துரையாற்றவுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெறும் சிறப்புக் கூட்டமாக குறித்த கூட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: