திருகோணமலை மாவட்ட இந்து சமய மாவட்ட நிர்வாகத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் இந்துகலாசார மாவட்ட நிர்வாகத்தினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக குறித்த நிர்வாகம் ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது இவ்வாறான மனிதாபிமான மனிதநேய தேவைகள் தொடரப்படவேண்டியதன் அவசியத்தை டக்ளஸ் தேவானந்தா குறழத்த நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினார்.
அத்துடன் இவ்வாறான சமூக சேவைகள் முன்னெடுக்கப்படும்போது நிர்வாகம் எரிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Related posts:
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்க...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப...
|
|