தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Monday, January 17th, 2022

தாளையடியில் அமைக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கமைய, 2025 இல் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் எனும் எண்ணக்கருவின் அடிப்படையில், யாழ் குடாநாட்டில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வடமாராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்  சுத்திகரிப்பு நிலையப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்தார்

இதனிடையே

சுண்டிக்குளம், ‘கலப்புக் கடல்’ என்று அழைக்கப்படும் ஆனையிறவுக் கடல் நீரேரிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இறால் கூடுகளினால் பருவமடையாத இறால்கள் பிடிக்கப்படுவதனால் வளங்கள் பூரணமான பலன் இன்றி அழிவடைகின்றன என்ற குற்றச்சாட்டு பிரதேச கடல் தொழிலாளர்களினால் முன் வைக்கப்பட்டிருந்தது

இந்நிரையில், கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டகாளஸ் தேவானந்தா, சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன்  உடனடியாக கடலில் கட்டப்பட்டிருந்த கூடுகளை அகற்றுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதேவேளை, அவர்களுக்கான இடைப்பட்ட காலத்திற்கான வாழ்வாதாரத்திற்காக கொடுவா மீன் வளர்ப்பிற்கான கடன் திட்டங்களை இரண்டு வாரங்களில் பெற்றுத் தருவதாகவும், அதற்கான பட்டியலை அதிகாரிகளிடம் வழங்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை ஆராய்ந்ததுடன்  பிரதேச கடல் தொழிலாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதன்போது, நீரேரியில் இருந்து இறால்கள் கடலுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் வகையிலான பொறிமுறை ஒன்றினை உருவாக்குதல் உட்பட பல்வேறு எதிர்பார்ப்புக்களை பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் - டக்ளஸ் தேவானந...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...