தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 1st, 2019

பொருளாதார வீழ்ச்சியிலும் வறுமையிலும் இருக்கும் மக்களுக்கு சுய பொருளாதாரத் திட்டத்தை தூக்கி நிறுத்தாதவரை உழைப்பவர் உரிமைகள் குறித்து பேசி பயனேதும் கிடையாது. இந்த நிலை மாற்றப்படும்போதுதான் உழைப்பாளர் தினத்தின் உண்மையான பலாபலன்களை எமது மக்கள் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக அனைவரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு உழைப்பது அவசியமாகும் எனஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று எமது தேசத்தில் இளைஞர் யுவதிகளுடன் குடும்பங்களை தலைமைத்துவம் செய்யும் பெண்களும் விஷேட தேவையுடையவர்களும் வேலைவாய்ப்புக்களுக்காக அலைந்து திரியும் அவல நிலை தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது.

இந்த நிலை தொடர்வதனால் பல ஆயிரம் குடும்பங்கள் தமது எதிர்கால வாழ்க்கை தொடர்பில் நிச்சயமற்ற தன்மையுடனேயே காணப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாது தொடரும் வறுமை நிலை காரணமாக தமது பிள்ளைகளை கல்வி நிலைமைகளில் கூட முன்னேற்றம் செய்ய முடியாதிருக்கின்றனர்.

இத்தகைய அவலங்கள் தீர்க்கப்படாதவரையில் உழைப்பாளர் தினமும் அதனுடனான தொடர்பும் இழக்கப்படும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

இதிலிருந்து மக்களை மீண்டௌச் செய்வது அவசியம். எமது மக்கள் தமது பாரம்பரிய தொழில்களில் சுதந்திரமாக ஈடுபட வேண்டும். எமது இளைஞர் யுவதிகளுக்கு நவீன தொழில் துறைகளில் தொழில் வாய்ப்புகள் கிடைப்பெற வேண்டும். இவற்றினூடாகவே உழைப்பாளர் தினம் அதன் அர்த்தம் கொள்ளும்.

இதை எதிர்கால திட்டமாக கொண்டு உழைப்பதும் அதை அடைவதற்கான பாதைகளை உருவாக்குவதற்காகவுமே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம்.

அந்தவகையில் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு, அபிவிருத்தி, அரசியலுரிமை, அரசியல் கைதிகளின் விடுதலை, எஞ்சிய நிலங்கள் மீட்பு, காணாமல் போனோரின் உறவுகளின் துயர் துடைப்பு, எமது சொந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் சுதந்திர உரிமை, இவைகளை வென்றெடுப்பதே எமது இன்றைய தேவையாகும். என தனது மேதின செய்தியில் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுக்க கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டவர்களாக நிகழ்காலம் நோக்கி நகரவேண்டும் என்பதுடன் எதிர்கால வாய்ப்புக்களை நோக்கி அணிதிரளவேண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் தேவைப்பாடு...
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...