தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – முல்லையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020

நாற்காலி கனவுகளுடன் இருப்பவர்களதுதேசியம் என்ற தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தை வளமானதாக்கி தருகின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

விசுவமடு தேராவில் முத்து நவரத்தினா அறக்கட்டளை கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தினருடன் அதன் வளர்ச்சி மற்றும் தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள அமைசார் டக்ளஸ் தேவானந்தா கலந்துறையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் குறித்த நிறுவனத்துக்கு சென்றிருந்தர்.
இதன்போது மாணவர்கள் மற்றும் நிர்வகத்தினருடன் கலந்துறையாடிய அமைச்சர் குறித்த நிறுவனத்தின் தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்-

இன்னிறுவனத்தின் சமூக நோக்கம் கொண்ட செயற்பாடு பாராட்டத்தக்கதொன்று.
அத்துடன் இன்நிறுவம் மேலும் பலமடைந்து அதன் சேவைகளை முன்னெடுக்க நாம் பக்கபலமாக இருப்பேன்.

அத்துடன் இப்பகுதி மிக வறிய மக்களை கொண்ட பகுதியாக இருப்பதுடன் இங்கு பெண்களை குடும்ப தலைமையாக கொண்ட குடும்பங்களது வாழ்வாதார பிரச்சினைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினைகள் என ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர் தீர்வு காண நான் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அத்துடன் இந்த அரசுதான் இனியும் தொடரும். அதில் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை.
அத்துடன் நான் இந்த அரசிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்திருக்கிறேன்.

அதாவது யுத்தத்தால் நேரடியாக கடுமையாக பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கும்போது தகுதி நிலைகளில் சற்று தளர்வு போக்கு காட்டுமாறு கேட்டிருக்கிறேன்.

அந்தவகையில் நான் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்குடன் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதை நடைமுறைப்படுத்திக்காட்ட எம்மிடம் சிறந்த பொறிமுறை உண்டு.

அதை நடைமுறைப்படுத்திக்காட்ட வரவுள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எமது கரங்களை பலப்படுத்துங்கள் நாம் உங்கள் தேவைகளை மட்டுமல்ல உங்களுக்கான கௌரவமான வாழ்வியலையும் உருவாக்கி தருவேன் என்றார்.

இதனிடையே 2016 ஆம் ஆண்டு இப்பகுதியின் வறிய மாணவர்களது கற்றல் தேவைகளை ஊக்குவிப்பதறாக உருவாக்கப்பட இந்நிறுவனம் தற்போது 120 மாணவர்களுடன் இயங்கிவறுகின்றது.

ஆனாலும் இங்கு பல்வேறு வளப்பற்றாக்குறைகள் கணப்படுகின்றது. குறிப்பாக வகுப்புக்களை நடத்துவதற்கான கட்டடவசதி போதாமை. தளபாடப்பற்றாக்குறை, ஆளணிப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சுனைகள் காணப்படுகின்றன்.
இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதால் இப்பகுதியில் வாழும் பல்வேறு திறமை மிக்க மாணவர்கள் தமது கற்றல் திறமைகளை வெளிக்கொணர முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த்ஜ பிரச்சினைகளுக்கும் தேவைப்பாட்டுக்கும் மாணவர்களின் நலன்கருதி தீர்வுகளை பெற்றுத்க்தருமாறு நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட அமைடச்சர் காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் ( கிருபன்) உள்ளிட்ட கடையின் முக்கியஷ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts:


வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்த...
மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் - அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துர...
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக...