தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!

Friday, December 15th, 2017

கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இற்றைவரையில் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கட்சியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் கொடிய யுத்தம் ஒன்று ஆரம்பமாவதற்கு முன்னர் எமது மக்கள் நாளாந்த உழைப்புடன் நிம்மதியாக வாழ்ந்துவந்தனர்.

ஆனால் அழிவு யுத்தம் நாட்டில் கோரத்தாண்டவமாடியபோது எமது மக்கள் அவலங்களையும் சேர்த்துச் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கியம் எதிர்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் யுத்தம் முடிவடைந்து மக்கள் இற்றைவரையில் இவ்வாறான அவலங்கள் தொடர்கின்றமையானது வருத்தமளிக்கின்றது.

அத்துடன் எமது மக்கள் தமது சொந்தக் கால்களில் நின்று வளமான ஒரு வாழ்க்கையை அனுபவிக்க அதற்கான சூழ்நிலையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

எமது கட்சி நிலைப்பாடானது கிடைக்கும் அதிகாரங்களை சமனாகவும் சமத்துவமாகவும் கொண்டதாக இருக்கவேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெறப்படாதவாறு செய்யவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:


நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...
கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...