தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்றை வெற்றிகண்டதுபோன்று ஜனாதிபதி இதனையும் வெற்றிகொள்வார் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021

தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானதொன்று என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நாட்டில் இருந்த வன்முறைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எவ்வாறு தீர்வுகண்டாரோ, இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தலை எவ்வாறு கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்து வைப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும், எங்களது வளங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கான விஜயத்தின்போது பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் அதற்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.

இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அவர்கள் உள்ளனர். 

விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு மீண்டும் வருகை தந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன்.

இதேவேளை சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சிறுதொகை நிதியை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார்இ அது முடியவில்லை.

எங்களது கஜானா காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை. இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழு நாட்டுக்குமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுகையில் – தவறுகள் எங்கும் நடக்கின்றது. இதனை எல்லா இயக்களும் எல்லாரும் செய்த செயற்பாடு தான். அதனை நாங்கள் பெரிதுபடுத்த முடியாது. இது அரசாங்கத்தின் கொள்கையில்லை. அது தனிமனித விவகாரம்.

அவர் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா என்பதையறிய விசாரணை நடைபெற்று வருகின்றது. அதன் பின்னரே அது உண்மையா பொய்யா என்பது தெரியும் என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை 2013 ஆம்ஆண்டில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு என்னும் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பெயரைக்கூறி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியிருந்தது. அந்த அமைப்பு தற்போது குறித்த பெண் உயிருடன் உள்ளதாக சொல்லப் போகின்றார்கள். இவ்வாறு பல பொய்பித்தலாட்ட செயற்பாடுகள் உள்ளன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: