தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, December 20th, 2019

ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் தீவக பிரதேசங்களை மட்டும் உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது இலங்கையில் வாழும் தமிழ் அனைத்து மக்களது அபிலாஷைகளையும் நிறைவு செய்து கொடுப்பதற்கான ஜனநாயக நீரியான கட்டமைப்பைக் கொண்ட அரசியல் கட்சியாகவே இருந்து வந்திருக்கின்றது என கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூல அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கட்சியின் செயற்பாடுகள் தீவகத்தை முன்னிறுத்தியதாகவே இருந்துவருவதாக கூறப்படுகின்றது இதன் உண்மை நிலை தொடர்டபில் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  குறிப்பாக தமிழர் பகுதிகளில் ஜனநாயகம் மழுங்கியிருந்த நேரத்தில் நாம் தீவகப் பகுதியில் அல்லலுற்ற மக்களின் துயரங்களை தீர்பதற்ககாகவே  அன்றைய ஆட்சியாளர்களீடம் அனுமதி பொற்று தீவகப்பகுதிக்கு வந்துது மக்களது வறுமையை போக்கியதுடன் அவர்களுக்கான நல்ல பாதுகாப்பையும் நாம் வழங்கியிருந்தோம்.

இந்நிலையில்’ 1994 ஆம் அண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கில் தேர்தல் கேட்டால் உயிர் பறிபோகும் நிலை காணப்பட்ட சூழ்நிலையில் இன்று தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என தம்மை கூறிக்கொள்ளும் தரப்பினர் அனைவரும் வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்து கொண்ட வேளையில் நாம் தற்துணிவுடன் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலடி எடுத்துவைத்தோம். இதனூடாக தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாமே என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

அதே போல 1995 களில் இராணுவம் யாழ் குடாநாட்டை விடுவித்திருந்த நிலைலயில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு எமது சேவையை செய்ய 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்து இன்றுவரை மக்களுக்கான பெரும்பணிகளை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

அந்தவகையில் நாம் தீவகத்தை மட்டும் முன்னிறுத்தியதாக எமது பணிகளை என்றும் மேற்கொண்டது கிடையாது. எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்கள் அனைவரது நலன்களையும் உள்ளடக்கியதாகவே இன்றுவரை இருந்துவருகின்றது என தெரிவித்த அமைச்சர் தமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அவர்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி தமது வாழ்க்கை முறையை கொண்டு செல்லவே தாம் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

Related posts: