தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல – சுதந்திரக் கட்சியின் செயலாளரிடம் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு!

Friday, January 18th, 2019

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தொடங்குவதே இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிலையான தீர்வைக்கான உதவும் என்பதே ஈ.பி.டி.பியின் நிலைப்பாடாகும் என்று சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் புதிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜெயசேகரவை சந்தித்த ஈ.பி.டி.பியின் விஷேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (16.01.2019) கொழும்பிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் புதிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜெயசேகரவை ஈ.பி.டி.பி.யின் நெல்சன். பாரூக், ஸ்ராலின் உள்ளடங்கிய விஷேட பிரதிநிதிகள் சந்தித்த கலந்துரையாடினர்.

புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பாகவும், தமிழ் மக்களின் மத்திய அரசியல் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் தென் இலங்கை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பின் தொடர்ச்சியாக இச்சந்திப்பு  நடைபெற்றது.

தொடர்ந்து ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், “ஏக்கிய ராஜ்ய” என்பதை 1978ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் “ ஒற்றையாட்சி” என்றே பிரயோகித்து வந்துள்ளார்கள். இன்று அதை “எக்சத் ரட்ட” என்ற சிங்களச் சொல்லுக்கு இணையான “ஒருமித்த நாடு” என்று தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்றது. இந்த நிலையானது சிங்கள மக்களையும், ஏமாற்றி, தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயற்பாடாகும்.

சிங்கள மக்களின் உரிமைகளை தமிழ் மக்கள் கேட்கவில்லை. தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளையே கேட்கின்றனர். அந்த நியாயத்தை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் ஊடாக அவர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையான அரசியல் தீர்வொன்று காணப்படுவதே நாட்டுக்கும், தமிழ், சிங்கள மக்களுக்கும் நன்மையாக அமையும்.

தமிழ் மக்கள் சமத்துவத்துடன் வாழவே விரும்புகின்றார்கள். இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் சில அரசியல் தலைமைகளே தமது அரசியல் லாபங்களுக்காக முன்னோக்கி நகர்த்துகின்றன.

எனவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையையும், அபிலாi~களையும் நிறைவேற்றுகின்ற அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு, தங்களின் பங்களிப்பும் அவசியமாகும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றை நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தாமலே, ஜனாதிபதியின் உத்தரவுகளுடன் நடைமுறைப்படுத்த முடியுமான விடயங்களை நடைமுறைப்படுத்தி, 13ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அரசியல் அபிலாi~களை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே ஏற்படுத்த உதவ வேண்டும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

Untitled-3

Related posts:

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் - யாழ் மாவட்ட ...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...