தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உட்கட்டமைப்புத் தேவைகளை தீர்க்க ஈ.பி.டிபி முயற்சிப்பதை வரவேற்கிறேன்  – அமைச்சர் மனோகணேசன் !

Thursday, August 16th, 2018

வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ளும் முகமாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினர் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்றையதினம் குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது வடக்கு கிழக்கு மக்களது வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமாணம் உள்ளிட்ட பிரச்சினைகள் அடங்கிய விபரக்கொத்துக்கள்  அடங்கிய அறிக்கை ஒன்று அமைச்சர் மனோகணேசனிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் அவர்கள் தமிழ் மக்களின் பிர்ச்சனைகள் மற்றும் வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் அக்கறை உடையவர் டக்ளஸ் தேவானந்தா என்றும் அவரது கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்தவதனூடாகவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களது எதிர்கால வாழ்வு முன்னேற்றம் காணும்  என்றும் தெரிவித்தார்.

ஏனைய சமூகங்கள் தமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தமது பிரதிநிதிகளை நாடுகின்றனர் துரதிஷ்டவசமாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் அந்த மக்களின் பிரச்சினைகள் தேவைகளை தீர்க்க முன்வருவதில்லை.

ஆனால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றவர் அவரின் மக்கள் நலன் முயற்சிகளை வரவேற்கின்றேன் என்றும் தெரிவித்ததுடன் அவர் முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு தேவையான பங்களிப்பை அமைச்சின் ஊடாக நிச்சயம் செய்வேன் என்றும் அமைச்சர் மனோகணேசன்.

Untitled-12 copy

Untitled-11 copy

3

2

Untitled-13 copy

Related posts: