தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி தீராப் பிரச்சினையாக்கக் கூடாது -அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு!
Sunday, August 13th, 2023நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சாணக்கியன் அகற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – எனது 30 வருட அரசியல் வாழ்க்கை கடக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் இன்றும் அரசியலில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்..
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சு சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
நான் எழுந்து என்ன பிரச்சனையை தீர்க்கவில்லை கூறுங்கள் பார்ப்போம் என கூறிய போது அவர் மௌனமாக இருந்தார். என்னிடம் நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும்போது பிரச்சினைகளை கூறுங்கள் தீர்வு காண்போம் எனத் தெரிவித்திருந்தேன்.
சாணக்கியன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சிலர் மக்கள் அனுபவித்த துன்பங்கள் வேதனைகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது மக்கள் பிரச்சனையை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சனைகளை தீராப் பிரச்சனையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் நாடாளுமன்றத்தில் கூறினார் மட்டக்களப்பில் தற்போது அரசியல் கட்சிய அலுவலகம் அமைத்து செயற்படுவதாக.. அவருக்கு சிலவேளை தெரியாமல் இருந்திருக்கலாம் 90க்கு பிற்பட்ட காலங்களில் மட்டக்களப்பில் எமது அலுவலகம் செய்யப்பட்ட நிலையில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தபோது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார்.
இது பற்றி அறிந்திடாத சாணக்கியன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேர்தலில் இறங்கினார் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் இறங்கினார். நாளை இன்னோரு கட்சியிலும் தேர்தலில் இறங்கலாம்.
ஆனால் போராட்ட இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய எங்களிடம் கொள்கை இருக்கிறது ஆனால் இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் நானும் பங்கு எடுத்தவன் என்ற வகையில் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.
என்னுடன் போராடிய சக இயக்கங்களைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவனேசதுரை சந்திரகாந்தன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.
அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆரம்ப அரசியல் தீர்வான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.
ஆகவே தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சனைகளைத் தீராப் பிரச்சினையாக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|