தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020

கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களின் ஊடாக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்காக தன்னால் திருப்தியடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் தேவைகளுடன் ஒப்பிடுகின்ற போது இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பருத்தித்துறை கொட்டிப் பிரதேசத்தில் கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அனைத்து கடற்றொழிலாளர்களும் தங்களுக்கு பொருத்தமான தொழில் முறைகளை  ஏனையவர்களுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்

இதனிடையே அல்வாய் வடக்கு மாவிலங்கையடி வீதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த வீதியை புனரமைப்பது உட்பட மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: