தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா!

Saturday, December 7th, 2019

தமிழ் மக்களின் தற்போதைய போக்கானது கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளதாக கடற் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

மக்கள் என்னுடன் எவ்வளவு தூரம் பக்கபலமாக இருப்பார்களோ அவ்வளவுக்கு என்னால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொடுக்க முடியும்.

ஆனால் எமது மக்கள் தங்களை பீடித்துள்ள மாயையிலிருந்து இன்னமும் மீளாதிருப்பது அவர்களை அவர்களே பின்னோக்கி தள்ளும் நிலைக்கு தள்ளிக்க்கொண்டிருக்கின்றது.இதுதான் இன்றும் நடைபெறுகின்றது.

தமிழ் மக்களது இந்த போக்கானது தொடருமானால் அவர்களை கடவுள் நேரில் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கிவிடும் என நினைக்கிறேன்.

கடந்தகால தமிழ் தலைமைகள் தங்களது தேர்தல் வெற்றிகளுக்காக எமது மக்களையும் அவர்களது வாக்குகளையும் பயன்படுத்தி வந்துள்ளமையால் இதுவரை எதுவித தீர்வுகளும் எட்டமுடியாதுள்ளது.

ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. இந்த மாற்றத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றே கூறிவருகின்றோம்.

ஆனால் தமிழ் மக்கள் அந்த நிலைக்கு இன்னமும் மாறவில்லை. இந்த நிலையில் இருந்து மக்கள் மாறி என்னுடன் அணிதிரளுவார்களானால் நான் நிச்சயம் தமிழ் மக்களின் எதிகாலத்தை வெற்றிகண்டு தருவேன் என்றார்.

Related posts: