தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கே ஆதரவு – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிம் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 17th, 2019

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஆதரவை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

 நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்த தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்தக்கள் பல தரப்பிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் அத் தேர்தலில் யாரை ஆதரிப்பது அல்லது யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது எமது கட்சிக்கு ஒளிவு மறைவுகள் இல்லை.

ஆனாலும் யாரை ஆதரிப்பதானாலும் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைப்போம். அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றவர்களுக்கு நிச்சயமாக எமது ஆதரவை வழங்குவோம். அதே நேரம் இத் தேர்தல் குறித்து இப்ப பேசப்பட்டாலும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பதும் தெரியவில்லை.

ஆகையினால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம் எனவும் அவர்’ மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த...
தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண...
தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார்...

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது - நாடாளுமன்ற...
விளையாட்டு வீரர்கள் வடகிழக்கிலிருந்து ஏன் தெரிவு செய்யப்படுவதில்லை? - டக்ளஸ் தேவானந்தா
இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ...