தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கச் செய்யாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019

இலங்கையில் நடைபெற்ற கசப்பான அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறல் என்பது அவசியமாகும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு சமத்துவமாக வாழ்வதற்கு ஏற்றவகையான அணுகுமுறையே அவசியமாகும்.

அதைவிடுத்து “பழிக்குப் பழி” என்றவாறாக விடயங்களை கையாள முற்பட்டால் அது இனங்களுக்கிடையே பகைமையையும், முரண்பாட்டையுமே மேலும் கூர்மைப்படுத்தும் அவ்வாறான கசப்பான சூழலுக்கு இடமளிக்காமல், இனங்களுக்கிடையே ஒற்றுமையும், ஐக்கியமும் ஓங்கி வளரச் செய்யும் வகையில் அவ்விடயங்களைக் கையாளும் பொறிமுறைகளும், அணுகுமுறைகளும் அமைவது மிக மிக அவசியமாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய தினம் (21.03.2019) ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்,  தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதும், சர்வதேச நீதிப் பொறிமுறையும், சர்வதேச சர்வதேசத் தலையீடுமே தமிழ் மக்களுக்கு நீதியையும், தீர்வையும் பெற்றுத்தரும் என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதும், தென் இலங்கையில் அரசுடன் தரகு அரசியல் நடத்துவதும் போலித் தமிழ்த் தேசியம் பேசுவோரின் தந்திரோபாய அரசியல் செயற்பாடாகக் கொண்டிருக்கலாம். இவ்வாறான இட்டை முகம்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.

“உள்நாட்டில் உழாத மாடு, ஜெனிவா போய் உழாது” என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். நான் கூறியதே இன்று நடந்துள்ளது. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்குச் சென்று அங்கு சர்வதேசத்தைப் பிடித்து அவர்களைக்கொண்டு அரசின் காதைத் திருகப்போவதாக பெரும் எடுப்பில் போனவர்கள்.

அங்கே ஜெனிவாவில் பிரதான பொதுச் சபையில் கலந்து கொள்ளாத அதேவேளை ஜெனிவா தேனீர் கடைகளில் சந்திப்புக்களை நடத்தியும், கலந்துரையாடல்களை நடத்தியும் காலத்தை வீணடித்துவிட்டு, தமிழ் மக்களுக்காக எதையோ சாதித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துவிட்டு இன்று நாடு திரும்பியிருக்கின்றார்கள்.

இவர்களின் இந்தப் பயணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் ஏதுமில்லை. ஜெனிவா தேனீர் கடைகளில் பேசுகின்ற விடயங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜெனிவா பொதுச் சபையில் பிரதிபலிக்கச் செய்யாது மாறாக அது ஊடகங்களுக்கும் அவரவரின் கட்சி அரசியலுக்குமே உதவலாம். என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவான...
மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி க...
வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது  தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் - வடக்கு ஆளு...

ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல : ஒற்றை ஆட்சியே - பருத்தித்துறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நா...
30 ஆம் திகதிய இலங்கை - இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டி...