தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 11th, 2017

வழிமுறைகள் எதுவானாலும் அது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடியலைத்தேடி தரும் தீர்வுகளை மையமாக கொண்டதாக அமையப்பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்தவகையில் அதற்கான சரியான வழிமுறைகளை மையப்படுத்தியதானதாகவே எமது அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஒற்றையாட்சியா அல்லது சமஸ்டியா என்பதற்கு அப்பால் எமது மக்களுக்கு ஒரு வழமான ஒளிமயமான வாழ்வை 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவதனூடாகவே பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

அத்துடன் எமது மக்கள் நிலையான சமூக பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதனூடாகவே தனிநபர் மட்டுமன்றி தான் சார்ந்தவாழும் சமூகத்தை பொருளாதார வழர்ச்சியில் முன்னேற்றம் காணச்செய்யமுடியும்.  அதற்கு மக்களுடன் நின்று மக்கள் சேவைகளை அர்ப்பணிப்படுனும் சமூக அக்கறையுடனும் உழைப்பதற்கு எமது கட்சி சார்ந்த ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related posts:

முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் - மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்-அமைச்சர்கள் ஜெயசங்க...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...