தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 25th, 2018

நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் போலித்தனங்களைப் பேசிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் வேட்பாளர்களையும் கூடவே ஏமாற்றி வருகின்றார்கள். அந்த ஆதரவாளர்களே இன்று உங்கள் முன் வாக்குக்கேட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தொடர்ந்தும் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளமாட்டீர்கள் என நம்பகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கு பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  –

தனிநபர் வருமானத்தை விருத்தி செய்வதனூடாகவே கிராமியப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். மக்கள் சுயதொழில்துறைகளை விருத்திசெய்யவேண்டுமாயின் அவர்கள் சார்ந்து வாழும் கிராமங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற உள்ளூர் வளங்கலூடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில்தான் எமது வேலைத்திட்டங்களை நாம் முன்னெடத்து வருகின்றோம்.

தீவக மக்கள் எப்போதும் சுயபொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவே விரும்புகின்றார்கள். அதனடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அர்களது பொருளாதார மேம்பாட்டுக்குப் பக்கபலமாக இருந்த உழைக்கத் தயாராக இருக்கின்றோம்.

இப்பகுதியில் நன்நீர் மீன்பிடி துறையை விருத்தி செய்வது எமது பிரதான எண்ணப்பாடாகவும் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. அதேபோன்று அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக இங்கு புகையிலைச் செய்கை தடுத்து நிறுத்தப்படுமாயின் அதற்கான மாற்றுத் தொழில் ஒன்றை இந்த மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும் என்று நாம் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா இப்பகுதியின் வாழ்வாதார தெழிலாக உள்ள பனைசார் தொழித்துறை புகையிலைச் செய்கை என்பவற்றுடன் வீதி அபிவிருத்தி வீதி விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட உட்கட்டுமாண வேலைகளையும் முன்னெடுக்கவேண்டியதேவை உள்ளது என்று சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் போலித்தனங்களைப் பேசிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் வேட்பாளர்களையும் கூடவே ஏமாற்றி வருகின்றது

அந்தவகையில் இம்முறை வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் சரியானதொரு முடிவை எடுத்து எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்பிக்கைகொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


நினைவுக் கல்லை மூடி மறைக்கலாம், எமது உழைப்புடன் நிமிர்ந்து நிற்கும் மண்டபத்தை மூடிமறைக்க முடியாது - ...
நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது - சாவகச்சேரியில...
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்...