தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை – ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021

தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு அவர்களால் ஒத்துப் போக முடியுமோ? என கேள்வி எனக்குள் இருக்கிறது என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒற்றுமைப்படாத தமிழ் கட்சிகளின் கூட்டினால் எதையும் சாதிக்க முடியாதாநிலையில் தமிழ் மக்கள் தமக்கான சந்தர்ப்பங்களை சரிவரப்  பயன்படுத்தி தமக்கான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்  –

தமிழ் தேசியக் கட்சிகள் என கூறுபவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக்கி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே மக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் நான் வெளிப்படையான கோரிக்கையை முன் வைத்தேன் எனக்கு பல ஆசனங்கள் வேண்டாம் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை தாருங்கள்,  தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு முடியுமானவரை நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருகிறேன் என்று ஆனால்  இரு ஆசனங்களே எமக்கு கிடைத்தது. இதனூடாக தமிழ் மக்ளும் தமது பிர்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்பவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

அத்துடன் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து பல பேச்சுக்களை பேசியுள்ளார்கள் அவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி, தான் தனியாக செயல்பட வேண்டுமென வெளியே நிற்கிறது. இவ்வாறு ஒரே நிலைப்பாட்டில் வர முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போகிறார்கள் என்றும் கேள்வியெழுப்பியிருந் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுடைய பிரச்சினையை உண்மையில் தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவேண்டுமே அல்லாமல் பத்திரிகை விளம்பரத்துக்காக பேசுகிறோமென பாசாங்கு செய்ய கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களது வாழ்வியலை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...