தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இருந்ததையும் இழந்துவிட்டோம் – துணுக்காய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Monday, January 8th, 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துவிட்டு நாம் கண்ட மிச்சம் ஒன்றுமே இல்லையென துணுக்காய் ஒட்டங்குளம் கிராம மக்கள்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திலுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து வருகின்றார்.

அதனடிப்படையில் ஒட்டங்குளம் கிராமத்தில் மக்களைச் சந்தித்தபோது அந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாக இருக்கின்ற சம்பந்தன் ஐயாவுக்கோ அவரது கட்சி சார்ந்தவர்களுக்கோ வறுமை தொடர்பில் எதுவும் தெரியாது. அத்துடன் பசி, வறுமை தொடர்பாக எதனையும் தெரியாதவர்களாகவே அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் அவர்கள் எப்படி நாங்கள் நாள்தோறும் எதிர்கொண்டுவரும் துன்ப துயரங்களை அறியமுடியும்.

யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்திற்குப் பின்னரும் எங்களின் அவலங்களை முன்னிறுத்தியும்  அவற்றைத் தீர்த்துவைப்பதாகக் கூறியும் தேர்தலில் வாக்குக் கேட்டு வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் அவர்கள் தமது வெற்றிக்குப் பின்னர் எம்மை நாடி ஒருபோதும் வந்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குக்காக மட்டுமே எம்மிடம் வருவார்கள்.

இதனால் அவர்களின் மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இன்று முற்றாக இழந்துவிட்டோம். அதனடிப்படையில்தான் நாம் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளித்து அந்தக் கட்சிக்கு முழுமையான ஆதரவை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

இந்நிலையில் எங்களது கனவுகளையும் ஆசைகளையும் எண்ணங்களையும் தங்கள் தலைமையில் கீழ் தீர்வுகண்டுதரவேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்

இதன்போது துணுக்காய், நட்டாங்கண்டல் வீதியின் புனரமைப்பின் அவசியம் குடிநீர் போக்குவரத்து தொழில்வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்த டக்ளஸ் தேவானந்தா அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு தமக்கு அரசியல் அதிகாரம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

Related posts: