தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் – நாடாளுமன்றில் எடுத்துரைத்த டக்ளஸ் எம்.பி!

Wednesday, October 10th, 2018

தமிழ் அரசியல் கைதிகளை இவ்வாறு தொடர்ந்து நீதி, நியாயமின்றி தடுத்து வைத்திருப்பதில் அவர்களது மனித உரிமைகைகள் திட்டமிடப்பட்டு மீறப்படுகின்றன.  இந்த இழப்புக்கான எதிரீடுகள் அலுவலக சட்டமூலத்தில் ‘இன்னலுற்ற ஆட்கள்’ பற்றிய  வரைவிலக்கணத்தின் (அ) 1ஆம் பந்தியில் ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற மோதலின்போது, அதன் விளைவாக, அல்லது அதனுடன் தொடர்புடைய, அல்லது, அதன் பின்னரான என்றும், 3ஆம் பந்தியில், இலங்கையிலுள்ள தனியாட்களின், குழுக்களின் அல்லது மக்கள் சமுதாயங்களின் உரிமைகள் மீதான முறைப்படுத்தப்பட்ட முழுமையான மீறுகைகளின்போது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவிலக்கணத்தின்படி இந்த தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குகின்றனர் என்றே கருதப்பட வேண்டும். அந்தவகையில், இவர்களுக்கு – அதாவது இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன இழப்பீடுகளை வழங்கப் போகிறீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள். மேலும் இந்த விடயத்தை தள்ளிப் போடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள், இந்த அரசாங்கத்தை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறித்திரிபவர்கள, உண்மையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதோ, இந்தத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள்மீதோ அக்கறை கொண்டிருந்தால், ஆளுமைமிக்கவர்களாக இருந்திருந்தால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பியிருந்தால், அவர்களை எப்போதோ விடுவித்திருக்கலாம்.

அதற்கான அரசியல் அதிகாரம் அவர்களிடம் இருக்கின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டின் புதிய அரசின் 100 நாட்கள் வேலைத்திட்ட காலகட்டத்திலேயே இதனை செய்திருக்கலாம். இப்போது – அதாவது தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கின்ற காலங்களில் இங்கே வந்து நீலிக் கண்ணீர் வடிக்கத் தேவையில்லை என்றே கருத வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: