தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, January 10th, 2019

தமிழ் அரசியல் கைதிகள் பெரும்பாலாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் என நாம் கூறுகின்றபோது, ‘தமிழ் அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் ஒருவருமில்லை. கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர’; என நீங்கள் கூறுகின்றீர்கள்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மொத்தமாக ,ந்த நாட்டில் 2279 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவே பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றினை முன்வைத்து அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆக, இந்த 2279 மனிதப் படுகொலைகளில் ,துவரையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத தமிழ் அரசியல் கைதிகள் எந்தக் கொலையினை செய்தார்கள் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்த முடியாமல் இருப்பது ஏன்? எனக் கேட்க விரும்புகின்றேன். சில நேரம் 2008க்கு முன்னர் செய்திருக்கிறார்கள் என நீங்கள் கூறினாலும், அது பற்றியும் பகிரங்கப்படுத்த இயலாதிருப்பது ஏன்? என்றே கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-7

Related posts:


வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...