தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு! 

Sunday, June 27th, 2021

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சாதாரண கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளில் பதினாறு பேர்களையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,..

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எமது ஒழுங்கமைப்பை ஏற்று
யாழ் வந்திருந்த கோத்தாபய ராஜபக்ச அவர்கள்
தன்னை நம்புமாறும், தான் ஜனாதிபதியானால் தமிழ் அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாகவும் எமக்கு முன்னிலையில் தமிழ் மக்களுக்கு
பகிரங்க மேடையில் வைத்து வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் அன்று சொன்னதை இன்று செயல் வடிவில்
நிறைவேற்ற தொடங்கியிருக்கும் ஜனாதிபதி கோத்தாபம ராஜபக்ச அவர்களுக்கு
தமிழ் மக்களின் சார்பாகவும், விடுதலையாகி வந்திருக்கும்
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சார்பாகவும்
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாஜக கட்சியின் செலாளார் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளும்
ஜனாதிபதி அவர்களால் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெவித்துள்ளார்.

Related posts: