Notice: Undefined index: userrrt in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp/header.php on line 4
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி! | EPDPNEWS.COM

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Untitled-4 copy0 Tuesday, November 7th, 2017

காலந்தாழ்த்தி செய்யப்படும் விடுதலையினால் எந்தவித நன்மையும் சம்மந்தப் பட்டவர்களுக்குக் கிட்டாது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தாமலும், உசுப்பேத்தாமலும், மேலும் மேலும் காலந்தாழ்த்தாமலும் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு, கிழக்கில் தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப்போராடிய பல தமிழ் பேசும் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பபடாமலும், குற்றப்பத்திரிகை பகிரப்படாமலும் வருடக்கணக்கில் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லை என்ற காரணத்தால், இன்னுமொரு தொகையினர் சிறையில் வாடுகின்றனர். அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு பிணைவழங்கப்படாமல் வழக்குகள் தாமதமாக விசாரிக்க எடுக்கப்படும் போது பல வருடங்கள் கடந்துபோகின்றன.

இறுதித்தீர்ப்பு வரும்பொழுது பலவழக்குகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் விடுதலை செய்யப்படுகின்றார்கள், அவ்வாறானவர்கள் வெளிவரும் பொழுது தமது இளமையை இழந்தவர்களாகவும், வாலிபத்தை இழந்தவர்களாகவும்  வயோதிபர்களாகவும், நோயாளிகளாகவும் வெளியே வருகின்றார்கள்.

இது மனிதாபிமான அடிப்படையில், பார்க்கும் பொழுது, ஒருபாவச் செயலாகும். அவர்களை வெளியில் எடுக்க, சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றனர். குடும்பத்தவர்கள் நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கியே காலத்தைக் கழித்து கடைசியில் அவர்களும் இறந்துவிடுகிறார்கள்.

கடந்த முப்பதாண்டு (30) காலத்தில்  தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நீதி கிடைக்காமலும், உரிமையும் சமத்துவமும் கிடைக்காமலும் மண்ணுடனும், கடலுடனும் சங்கமமாகி விட்டார்கள். அரசுகள் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

அண்மையில் தமிழ் இளைஞர் ஒருவர் 18 ஆண்டுகள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு, 18 ஆண்டுகளின் பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் இளமையையும் இழந்த வாழ்வையும் யாரும் மீளக்கொடுக்க முடியாது.

இதேபோல், அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களும், தமக்காக நீதிகேட்டு உண்ணாவிரதமிருக்க வேண்டிய, நிலமையே, ஏற்பட்டுள்ளது. சட்டமா அதிபருக்கு, வவுனியாவிற்கு வழக்கை மாற்றுகின்ற அதிகாரமிருந்தும், அவர் அதைப்பயன்படுத்தத் தயங்குகின்றார்.

இதற்கு பின்னால் இருக்கும் தடை என்ன? தெற்கை சாந்தப்படுத்த வடக்கிலுள்ளவர்களை சிறையில் அடைக்கின்றார்கள். குற்றமிழைத்தால், சட்டத்தின் காவலர்களும், சட்டத்தை செயற்படுத்துபவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே காலந்தாழ்த்தி செய்யப்படும் விடுதலையினால் எந்தவிதமான நன்மையும் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கிட்டாது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தாமலும், உசுப்பேத்தாமலும், மேலும் மேலும் காலந்தாழ்த்தாமலும் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்..


மாற்று வலுவுடையோருக்கு உதவ பிரதமரிடம்  புதிய திட்டத்தை கையளித்தார் டகளஸ் தேவானந்தா.
தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்களஸ் தேவ...
வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில்...
இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்ட...
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...