தமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்!

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்து அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை விஷேட அம்சமாகும்.
இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஏற்கனவே சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் குறித்த 16 சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோன்று தமிழர் தாயக பிரதேசமான வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளடங்கலாக கிளிநொச்சி மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றியை உறுதிசெய்யும் திடசங்கற்பத்தடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்பார்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
|
|