தமிழரசுக் கட்சியிடம் சரணாகதியாகி விட்டதா கூட்டமைப்பு?  – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 2nd, 2016

கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளை நிராகரித்தும், வாக்களித்து தொடர்ச்சியாக வெற்றிபெறச் செய்த தமிழ் மக்களை நிராகரித்தும், பல வழிகளிலும் பங்களிப்புச் செய்து கூட்டமைப்பின் பெயரை சர்வதேச தளத்தில் பேசு பொருளாக்கிய புலம் பெயர் தமிழ் மக்களை நிராகரித்தும் கூட்டமைப்பு தற்போது தான்றோன்றித் தனமாக செயற்படுவது தமிழ் மக்களை அதிருப்பதியடைச் செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக நீண்டகாலமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கூறிவந்தவை தற்போது மீண்டும் ஒருமுறை நிதர்சனமாகியிருக்கின்றது என டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது பதிவில் –

சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேணடும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் தற்போதைய சூழலில் ஜெனிவாவில் ஐ.நா.சபை முன்னறலில் ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் செயற்பாடுகளைக் கண்டித்து கோசங்களை முன்வைப்பதுடன், கூட்டமைப்பினரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகளை வீதியில் போட்டு இழுத்து, மிதித்து, தீயிட்டு தமது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

14519816_1587449418218150_2128456729363400283_n

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அரசுடன் கூட்டமைப்பு நடத்தும் தனிமனித பெருமிதங்களுக்கான இணக்க அரசியலானது தமிழ் மக்களுக்கு பயன் அற்றது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புலம்பெயர்ந்து வாழும் மக்களும், தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுத் தளத்திலும், நிகழ்வுகளிலும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கும், எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுக்க முடியாமல் ஓடி ஒழிக்கின்ற நிலைமையே இன்று அதிகரித்து வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக வாக்களிக்க வேண்டும் என்றும், ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டும் என்றும், தமது கரங்களை பலப்படுத்த வேண்டும் என்றும் பல தடவைகள் உணர்ச்சி பொங்கப்பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து வந்துள்ளார்கள்.

அரசியல் பதவிகளுக்கு வந்தபின்னர், வாக்களித்த தமிழ் மக்களை மறந்துவிடுகின்றார்கள். கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதை தமிழ் மக்கள் தமது தலைவிதியாகச் செய்வதாகவே கூட்டமைப்பினர் கருதுகின்றார்கள்.  தமிழ் மக்கள் உணர்வெழுச்சியோடு நடத்திய எழுக தமிழ் கூட்டுப்பேரணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் கடுமையாக விமர்சித்ததுடன், நிராகரிக்கவும் செய்தார்கள்.

கூட்டமைப்பின் நிராகரிப்புக்களையும் மீறி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து ‘எழுக தமிழ்’ பேரணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் உணர்வெழுச்சியோடு நடத்திய ‘எழுக தமிழ்;’ பேரணியை தென் இலங்கையில் பேரிணவாதிகள் இனவாதமாக சித்தரித்தபோதும், அதைக் கண்டிக்காமல் கூட்டமைப்பினர் மௌனமாகவே இருந்து பேரினவாதிகளுக்குத் துணைபோய், தமிழ் மக்களின் உணர்வுகளையும், அபிலாiஷகளையும் உதாசீனம் செய்து வருகின்றார்கள்.

14470610_1587449518218140_3704245835580729354_n

கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளை நிராகரித்தும், வாக்களித்து தொடர்ச்சியாக கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்த தமிழ் மக்களை நிராகரித்தும், பல வழிகளிலும் பங்களிப்புச் செய்து கூட்டமைப்பின் பெயரை சர்வதேச தளத்தில் பேசு பொருளாக்கிய புலம் பெயர் தமிழ் மக்களை நிராகரித்தும் கூட்டமைப்பு தற்போது தான்றோன்றித் தனமாக செயற்படுவது தமிழ் மக்களை அதிருப்பதியடைச் செய்துள்ளது.

இது தவிரவும் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களை உசுப்பேற்றி ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என்று கதைகூறும் கூட்டமைப்பினர் தேர்தல் முடிந்தது அவர்களுக்குள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நின்று கொண்டு, எதிரும் புதிருமாகவே செயற்பட்டுவருவது ரகசியமானதல்ல. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திற்குள் புதைந்துபோயுள்ளதாகவும், சமபந்தன், மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் இவர்களின் பிடியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுவிக்க வேண்டும் என்றும் அதிலுள்ள ஏனைய கட்சியினர் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தும் வருகின்றனர்.

ஜெனிவாவில் ஒன்று திரண்ட தமிழ் மக்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரின் உருவப் பதாதைகளையே வீதியில் இழுத்துச் சென்று காலால் மிதித்து தீ மூட்டவும் செய்துள்ளனர் என்பதை அவதானிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக நீண்டகாலமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கூறிவந்தவை தற்போது மீண்டும் ஒருமுறை நிதர்சனமாகியிருக்கின்றது என ஆமலும்  பதிவிட்டுள்ளார்.

Related posts:

முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்! - -  டக்ளஸ் தேவானந்தா அர...
மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...

உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் -  வவுனியாவில் செயலா...
மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!
மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை - மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து - அமைச்சர்...