தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் திட்டம்!

Monday, November 23rd, 2020


….,…………………
கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறுகிய காலத் திட்டமிடலுடன் சென்றவர்கள் திட்டமிட்டவாறு நாட்டுக்கு திரும்ப முடியாமையினால்> கடந்த பல மாதங்களாக எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை தன்னால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்று குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இன்னல்களில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டியது தன்னுடைய தார்மீகக் கடமை எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபஷ அவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான முறையில் உங்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், நாட்டிற்கு வருவதற்கு ஆவலாக இருப்போர் +94760225167, +94769122831, +919003067621 ஆகிய இலக்கங்களில் ஒன்றிற்கு தொலைபேசி ஊடாகவோக அல்லது வட்ஸ்அப் செயலி ஊடாகவோ தொடர்பு கொண்டு தங்களில் விபரங்களை வழங்கினால் அழைத்து வருவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: