தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

கடந்த ஆட்சியில் எமது மக்களுக்கு பயன் தராமல் முடங்கிக் கிடந்த மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் பணிகளை முழு ஈடுபாட்டுடன் விரைவுபடுத்தியுள்ளேன்
அரசியல் தீர்வை வலியுறுத்தும் அதேவேளை எமது மக்களின் முதன்மை பிரச்சனைகளான காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கள் மற்றும் வீடற்றோருக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தமது முழுமையான விருப்பத்தையும்,உதவியையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள் என்று மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்
இன்று(07.11.2018)அமைச்சில் நடைபெற்ற விஷேட பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
இந்த அமைச்சானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்திருந்தால் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சனைகளை தீர்த்து வைத்திருப்பேன். தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு தமிழ்மக்கள் வீதியில் இறங்கி போராடும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்பட இடமளித்திருக்க மாட்டேன்.
நான் ஆட்சியில் தொடருவதற்கு தடையாக இருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்மக்களையும், தமிழ் மக்களுக்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து தமது நலன்களை மட்டும் முன்னிருத்தியே செயற்பட்டதால் நிரந்தரத் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும் தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள்.
இப்போதும் தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிடக்கூடாது.
சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களின் அபிலாஷைகளையும்,உரிமைகளையும் உதாசீனம் செய்யக்கூடது தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட. வேண்டும் என்றும் தமிழர் பிரதேசங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களைப்போன்று அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றார்கள். எமது மக்களின் விருப்பத்தை அன்மையில் நாடாளுமன்ற. வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்திலும், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்விலும் வெளிப்படுத்தியுள்ளேன்.
எனவே தமிழ்த் தலைமைகள் என்போர் மிக முக்கியமான் இக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஊடகசந்திப்பின் போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் பிரதி அமைச்சர் மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|