தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய் பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Tuesday, June 23rd, 2020


கச்சாய் கெற்பெலி பகுதியில் இறால் அறுவடைசெய்யும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அதிகரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி கச்சாய் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் இறால் அறுவடை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தரையாடினார்.
இதன்போது குறித்த இறால் அறுவடை செய்யும் தொழிலாளர்கது “பாடு” பகுதியை தனியார் ஒருவர் அத்துமீறி அபகரித்து வைத்துள்ளதால் அப்பகுதியில் தாம் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடக்க முடியாதுள்ளமையால் தமது குடும்ப வருமானம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு குறித்த நபரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது பாடுகளை மீளவும் பெற்றுத்தருவதுடன் அவரது அத்துமீறல் செயற்பாட்டையும் தடுத்த நிறுத்தி நியாயம் பெற்றுத் தருமாறு அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அவர்களது பிரச்சினைகளை அவதானத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரையில் சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள 9 கடற்றொழிலாளர்களது அமைப்புகளையும அழைத்து துறைசார் அதிகாரிகள் முன்றிலையில் இது குறித்த ஆராய்ந்து நடவடிக்கை மேறற்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: