தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

Wednesday, May 25th, 2022

சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இறால் வளர்ப்பை மேற்கொண்டு நீர் வேளாண்மையை மேற்கொள்வதற்கு தொழில் முயற்சியாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி உஷா, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் நிருபராஜ், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியான பட்டியல் முறைய...
புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!