தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Friday, August 25th, 2017

இலங்கையில் 20 மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வரட்சி காரணமாக 2017 ஆகஸ்ட் 22ஆம் திகதி வரையிலும் 137 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3 இலட்சத்து 69 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 70 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி வரையிலான காலப் பகுதியிலேயே மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டனர்.

வரட்சி பற்றி விவாதத்தில் பங்கு கொள்ளும் போது சில மாவட்டங்களில் மழை பெய்யவும் ஆரம்பித்துள்ளது.

தென் இலங்கையின் திடீர் வெள்ளம், மண்சரிவு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தையும் அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கவேண்டிய காரணத்தால் அரசுக்கும் அதிக செலவினத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோன்று கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இலங்கையின் 20 மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, நெற்பயிர் உட்பட விவசாயப் பயிர்கள் நாசமடைந்தன,

பயன்தரு வீட்டு மிருகங்களும் பறவைகளும் செத்து மடிந்தன் ஆறுகளும், குளங்களும், கிணறுகளும் ஏனைய நீர் ஊற்றுக்களும் வறண்டு போயின் மொத்தத்தில் மக்கள் அனைவரும் வாழ்வின் மூலாதாரங்களை இழந்து கைசேதப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சானது, வரட்சியினால் வற்றிப்போன நீர் மூலங்களை தூர்வாரி ஆழப்படுத்துவதற்கும் நீரோடைகள், ஆறுகள், கிணறுகளைத் துப்புரவு செய்வதற்கும் வரட்சியினால் வாழ்வாதார மூலங்களை இழந்து நிற்கும் மக்களுக்கு புனர்ஜீவனம் அளிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி கிராம மக்களையும் பிரதேச, மாகாணசபை மட்டத்தில் கலந்துரையாடி, உடனடியாகச் செய்ய வேண்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்க வேண்டும். இதற்கு அரசாங்கம் நிதி வழங்கவேண்டும்.

முதலில் குடிதண்ணீர் வழங்குவதற்குத் தாங்கிகளையும் பவுசர் மூலம் தண்ணீரைக் கிராம மட்டத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கு வழங்குவதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும்.

நிவாரணச் சேவைகள் பற்றி மக்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் கௌரவ நிதி அமைச்சர் அவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் மோட்;டார் சைக்கிள்களுக்கும், இணையச் வேவைகளுக்கும் வரிச்சலுகையை அளித்தமையைப் பாராட்ட விரும்புகின்றேன்.

ஆனால், அவர் மக்கள் நாட்டின் வரட்சியாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பவுசர்களுக்கும், பால் சேகரிக்கும் பவுசர்களுக்கும் இறக்குமதிச் சலுகை அளித்து பவுசர்களுக்கு நாட்டில் நிலவுகின்ற தட்டுப்பாட்டையும் குறைத்திருக்க வேண்டும்.

எனவே பவுசர்களுக்கும் இறக்குமதி சலுகை அளிப்பதோடு உள்நாட்டில் தயாரிக்கக் கூடிய பவுசர் தாங்கிகளுக்கும் வரிச்சலுகை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் பல குறிப்பிபட்ட மாவட்டங்களில் நிலவுகின்ற வரட்சி பற்றிய சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து ள்ளார்


தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே அரசுடன் உறவு -  டக்ளஸ் தேவானந்தா!
சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது - செயலாளர் நாயகம் ...
அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...