தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 15th, 2020

வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில்; முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையி்ல் அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை நாளைமுதல் நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயன்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்தார்.

இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? - டக்ளஸ் தேவானந்தா!
அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்...
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...

நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இருந்ததையும் இழந்துவிட்டோம் - துணுக்காய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம...
தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!