தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019

மக்களையும் சமூகத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாது தடம் மாறிச் செல்லும் எமது இளம் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களையும் திட்டங்களையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வளமூல அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமையகத்தில் இன்றையதினம் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பொது அமைப்பினருடனான சந்திப்பு இடம்பெற்றது
இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களின் மனங்களில் தமது எதிர்காலம் குறித்த சிந்தனைகள் உருவாகி மாற்றங்கள் ஏற்படும் போதுதான் நிரந்தர தீர்வை எட்டமுடியும். எமது சாமூகத்தில் தற்போது அதிகரித்துவரும் குற்றங்களை கட்டுப்படுத்த நாமும் மக்கள் மீது அக்கறையுள்ள பொறுப்பான கட்சி என்ற வகையில் அதிக பங்கெடுக்க வேண்டும்.

சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விடயங்களிலும் பிரச்சினைகளிலும் அது தொடர்பிலான விமர்சனங்களும் சுய விமர்சனங்களும் ஆரோக்கியமானதாக நடைபெறவேண்டும். இதனூடாகவே ஆரோக்கியமான பெறுபேறுகளை நாம் அடைய முடியும்.

அதுமட்டுமல்லாது நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தி பரிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிககை எடுப்பதற்காக வும் துறைசார் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடவுள்ளதுடன் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களையும் தருமாறு கோரவுள்ளேன்.

குறிப்பாக கம்பரெலிய திட்டம் மற்றும் ஐ திட்டம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட அல்லது மோசடிகள் தொடர்பில் இதான்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை அறிக்கையிட்டு தருமாறும் அதிகாரிகளிடம் பணிக்கவுள்ளேன் என்றார்.

Related posts:


அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது - தீர்வு தாருங்கள் என புதிதாக உ...
வன்னியின் பிரதிநிதிகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தியதே வரலாறு : மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!