டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் – இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

Thursday, November 30th, 2017

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்திருந்த  கோரிக்கையினை அடுத்து வடமாகாணத்தில் அரச பேருந்து பணியாளர்கள் மேற்கொண்டுவந்த போக்குவரத்து சேவை பகிஷ்கரிப்பு  வழமைக்கு திரும்பியுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த கோரிக்கையை இன்றையதினம் காலை முன்வைத்திருந்தார்.

குறித்த கோரிக்கையில் –

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணித் தவிர்வுப் போராட்டமானது, இன்றைக்கு மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பான நிலைக்குத் தள்ளப்ட்டுள்ளனர்.

குறிப்பாக, தற்போது பாடசாலைகளில் வருட இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பருவகால பயண அனுமதிச் சீட்டுகளைப் பெற்றிருக்கின்ற மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், அரச ஊழியர்களும், நோயாளர்கள் உள்ளிட்ட ஏனைய பொது மக்களும் வடக்கு மாகாணத்தில் மேற்படி போக்குவரத்துச் சேவையானது ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனியார் போக்குவரத்துச் சேவைகளின்றிய பல பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதால், மேற்படி பணித் தவிர்ப்பு நடவடிக்கை காரணமாக அப் பகுதிகளின் மக்களும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். எனவே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணித் தவிர்ப்பு போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வருவது அத்தியவசியமாக உள்ளது.

மேற்படி பணியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?

இந்தப் போராட்டத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில்  எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்ன?

மேற்படி பணித் தவிர்ப்பு போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இதுவரையில் அத்தகைய ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

உடனடியாக  இப்போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களை கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த கோரிக்கையை இன்றையதினம் காலை முன்வைத்திருந்த நிலையில் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா இபோ.ச ஊழியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி  கலந்துரையாடியதை அடுத்து குறித்த பிரச்சினைக்கு  தீர்வுகாணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் -  டக்...
எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை ...

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...