டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் – சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை

Sunday, June 12th, 2016

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்  (12) மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது .

இதன்போது சனசமூக நிலைய பிரதிநிதிகள் மின்சாரம், குடிநீர், மலசலகூடம், நீர் வடிகால் புனரமைப்பு, மைதானம் மற்றும் உள்ளக வீதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட தேவைப்பாடுகளின் அவசியம் தொடர்பில் எடுத்து விளக்கினர்.

குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தேவைப்பாடுகளை துறைசார்ந்தோரூடாக  நிவர்த்தி செய்யும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் அதற்கான திட்ட அறிக்கையினை தமக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எமது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தோம். அதேபோன்று எதிர்காலங்களிலும் இப்பேற்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியம் என்று டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

நாவற்குழி 300 வீட்டுத்திடடத்தை அபிவிருத்தி செய்து அங்கு எமது மீள்குடியேற்றத்திற்கு முழுமையான பங்களிப்பு செய்திருந்த நிலையில் நாம் தங்களுக்கு என்றும், நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம் என்றும், அந்த வகையில் எதிர்காலங்களிலும் தங்களது சேவை தொடரவேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே. ஜெகன் ) உடனிருந்தார்

Related posts:

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு டக்ளஸ் எம்.பி விடுத்துள்ள முக்கிய செய்தி! (வீடியோ இணைப்பு)

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டி...
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...