டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் – யாழ் மாவட்ட கிறிஸ்தவ போதகர்கள்!

Thursday, February 8th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் வழிகாட்டிலின் கீழ் தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் மட்டுமே அமைதியானதும்  சுபீட்சமானதுமான வாழ்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாவட்ட கிருஸ்தவ போதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த யாழ் மாவட்ட கிருஸ்தவ பாதிரியார் சங்க போதகர்கள் சங்க குழுவினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது அரசியல் தெரிவுகளை தவறானவர்களிடம் கொடுத்து வந்தமையால்தான்  இற்றைவரை அவர்கள் ஒரு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வியல் நிலைக்கு வரமுடியாதவர்களாக இருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

ஆனால் இம்முறை மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது போலி வேஷங்கள் அம்பலப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் தாம் இவ்வளவு காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறிவந்த போலித் தேசியவாதத்தை நம்பி ஏமாற்றடைந்துள்ளதை உணர்ந்துள்ளனர். அதனால் இம்முறை கடந்தகாலங்களில் விட்ட தவறை நிவர்த்தி செய்ய நினைக்கின்றனர்.

அந்தவகையில் எதுவித எதிர்பார்ப்புகளும் இன்றி தமிழ் மக்களது நலன்களுக்காக மக்கள் மத்தியில் இருந்து சேவை செய்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை தாம் மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொண்டு அவர்களூடாகவே தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும் என்று உணர்ந்துள்ளனர்.

இதற்காக தமது சபையூடான கிறிஸ்தவ போதகர்கள் தமது சபையூடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – இன்று மக்கள் மத்தியில் ஒரு தெளிவும், மாற்றுத்தலைமை வேண்டும் என்ற எண்ணப்பாடும் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி தமக்கான தேவைகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் எம்மிடமே உள்ளது என்பதையும் இனங்கண்டுள்ளனர்.

அந்தவகையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு தருவார்களாயின் நாம் தமிழ் மக்களின் வாழ்வாதார தேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் காலக்கிரமத்தில் தீர்வுகண்டு கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் உடனிருந்தார்

27946648_1669045743134506_872951131_o

27907326_1669046123134468_736499922_o

27947021_1669044693134611_999169926_o

Related posts: