டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூர்தி சேவை ஆரம்பம்!

Tuesday, June 11th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் வழித்தடம் 773 இலக்க மூளாய் ௲ அச்சுவேலிக்கான தட்டிவான் சேவை தனியார் சிற்றூர்தி சேவையாக எதிர்வரும் ஞயிற்றுக்கிழமைமுதல்  தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த சேவை 1990 களில் தட்டிவான் சேவையாக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த மூளாய் ௲ அச்சுவேலிக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை மீண்டும் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுத்தந்து தமது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகையை பெற்றுத்தாருங்கள் என மூளாய் தட்டிவான் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கடந்த மாசிமாதம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த உரிமையாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு அச்சேவையை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை (16)  குறித்த சேவை ஆரம்பிப்பதற்கான விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு குறித்த சேவையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

குறித்த மார்க போக்குவரத்து சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் மீண்டும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் ந...
யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
புலம்பெயர் தேச உறவுகள்போல எம் தேச உறவுகளும் வாழும் சூழல் உருவாக வேண்டும் - காக்கைதீவில் டக்ளஸ் தேவான...
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...