ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளுக்கிடையே நற்புறவுச் சந்திப்பு!

Wednesday, December 7th, 2016

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் மற்றும் நாளாந்தப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தேசியநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஈ.பி.டி.பிக் கட்சியினருக்கும், ஜே.வி.பிக் கட்சியினருக்குமிடையே கலந்துரையாடப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ளஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, அதன் தலைவர் அனுரகுமாரதிஸாநாயக்க, ரில்வின் சில்வா, விஜிதஹேரத், நலின்பண்டாரஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில்,புதிய அரசியலமைப்பு, தேசியநல்லிணக்கச் செயற்பாடுகளின் குறைபாடுகள், தமிழ் மக்களின் முதன்மைக்குரிய அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் சமகாலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் சிங்களமக்களின் பிரதிநிதிகளைஉள்ளடக்கியஆளுங்கட்சிமற்றும் எதிர்க்கட்சிகள் உட்படஅனைத்துக் கட்சியினருடனும் இவ்வாறானகலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் தெரிவித்தள்ளார்.

unnamed (2)

unnamed (3)

unnamed (1)

Related posts:


முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்! - -  டக்ளஸ் தேவானந்தா அர...
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் - டக்ளஸ் தேவானந்தா எம்....
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல...