ஜனாதிபதி கோரிக்கை – காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

காணாமல் போனோரின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னை கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|